புதன், 16 ஜனவரி, 2013

நான் பேச வந்தேன்





நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக